புதுச்சேரி முழுவதும் மாதத்தில் கடைசி வேலை நாளான ஜூலை 31-ம் தேதி புத்தக பை இல்லாத நாள் (No Bag Day) கடைபிடிக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகியுள்ளது. இந்நிலையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் கடந்த 2020ல் வெளியிடப்பட்ட பள்ளி பை கொள்கையின் அடிப்படையில், புதுச்சேரியில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளன்று 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பையில்லா தினம் (NO BAG DAY) கடைபிடிக்க பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மாதத்தின் கடைசி வேலை நாளான ஜூலை 31 அன்று பள்ளிகளில் பயில்லா தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் புத்தகப் பை இன்றி வந்தனர் அவர்களை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இதை தொடர்ந்து பையில்லா தினமான ஜூலை 31 மாணவர்களுக்கு கலை, விளையாட்டு, வினாடி வினா போட்டி போன்றவை நடைபெற்றது. பைகள் இல்லமால் பள்ளிக்கு வந்தது தங்களுக்கு மிகவும் ஜாலியாக இருந்ததாக மாணவர்கள் குஷியாக தெரிவித்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *