முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் வாரிசுகளான கலாநிதி மாறன் சன் நெட்வொர்க் தொடங்கி ஆரம்பம் முதலே தொழிலதிபராக உள்ளார். ஆனால் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே மத்திய அரசியலில் இருப்பதால் தொழிலில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் தற்போது அவருடைய வாரிசுகள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சென்னையில் தொடங்கி புதிய முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாநிதி மாறனின் வாரிசுகளான திவ்யா தயாநிதி மாறன் மற்றும் கரண் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் நிவேதா அரவிந்த் என்பவர் உடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி உள்ளனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு விளங்கும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர் Kkix. இது ஒரு ஸ்னீக்கர் ஷூ தயாரிக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இளைஞர்கள் மத்தியில் ஸ்னீக்கர் ஷூக்களுக்கு நல்ல ஆர்வம் உள்ள நிலையில் இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த கலாச்சாரத்தை புகுத்த உள்ளனர். சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் அகில இந்திய அளவில் ஆர்டர்களை பெற்று வாடிக்கையாளர்கள் விரும்பும் ஷூக்களை தயாரித்து கொடுக்க உள்ளது.

ஆர்டர் பெற்ற இரண்டு அல்லது மூன்று வாரங்களில் டெலிவரி செய்ய இருப்பதாகவும் இந்த ஸ்னீக்கர் ஷூக்கள் விலை 18000 வரை 30,000 வரை விற்பனையாகும் கூறப்படுகிறது.

18 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் மத்தியில் ஸ்னீக்கர் ஷூக்களுக்கு நல்ல ஆதரவு இருப்பதால் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இன்னும் ஓரிரு வருடங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *