புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் சித்திரை கடற்கரை திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் சித்திரை கடற்கரை திருவிழா நேற்று முன்தினம் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் துவங்கியது.
மூன்று நாள் நடக்கும் இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், முதன் நாளான நேற்று கடற்கரை காந்தி திடலில் இசை கச்சேரி, நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடந்தது.
பாரதி பூங்காவில், பொய்க்கால் குதிரை நடனம், குஜராத்தி நடனம், பரத நாட்டியம் மற்றும் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த கலை நிகழ்ச்சியில் அங்கு வந்த சுற்றுலா பயணிகளும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இன்று 15ம் தேதி இசை கச்சேரி, நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
Advertisement
