ஆந்திராவில் அடுத்த தேர்தலுக்கு ஜெகன் மோகன் இப்போதே தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். இதற்காக மாநிலம் முழுவதும் `ஜெகன் அண்ணா எங்கள் எதிர்காலம்’ என்று வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அவ்வாறு ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரை நாய் ஒன்று கடித்து கிழித்துவிட்டது. விஜயவாடா என்ற இடத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை பார்த்த நாய் அதனை சாப்பிடும் நோக்கத்தில் கடித்து இழுத்து கிழித்தது.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவியிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர் தாசரி உதயஸ்ரீ என்ற பெண் உடனே முதல்வரின் போஸ்டரை கிழித்த நாய் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி வேடிக்கையாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்திருக்கிறார். அதில், `போஸ்டரை கிழித்து நாய் முதல்வரை அவமதித்துவிட்டது.
