உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்டுள்ள ஹாரி பாட்டர் கதைகள், இப்போது தொடராகவும் உருவாகவுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாயாஜால பள்ளி, வில்லனின் பிடியில் மாட்டாமல் ஒவ்வொரு படத்திலும் தப்பிக்கும் சிறுவன்..அவன் வளர்ந்து அந்த பயங்கர வில்லனை தனது மாயாஜால சக்தியால் அழிப்பதுதான் ஹாரி பாட்டரின் மொத்த கதையுடைய சுருக்கம். 1998 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை 7 புத்தகங்களாக வெளியான ஹாரி பாட்டர், அடுத்து திரைப்படங்களாக வெளியாகின. இதையடுத்து, இந்த மாயாஜால கதைகள் இப்போது  டிவி தொடர் வடிவிலும் வெளியாகவுள்ளது.

அனைவரும் விரும்பும் ஹாரி பாட்டர்

மாயாஜால உலகை தன் வசப்படுத்த வேண்டும் என பல கெட்ட காரியங்களை செய்யும் வில்லன் வால்டமார்ட். இவனிடத்தில் தனது பெற்றோரை பறிகொடுத்த ஹாரி பாட்டர், அவனை அழித்து கடைசியில் ஹாக்வர்ட்ஸ் பள்ளியை  காப்பாற்றுவதுதான் படத்தின் மொத்த கதை. தான் ஒரு மந்திர வித்தைகள் தெரிந்தவன் என்பதையே அறியாத சிறுவன், மாய மந்திரங்கள் நிறைந்த பள்ளிக்கு செல்வதும், அங்கே ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து படிப்பதும் பின்பு அனைவரும் அஞ்சி நடுங்கிய வில்லனை அழித்து வெற்றிபெறுவதும் ஹாரி பாட்டர் புத்தகங்களில் கதையாக எழுதப்பட்டிருக்கும். இதனை, பிரிடிஷ் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் எழுதினார். இந்த புத்தகங்கள் வெளியாகி சிறு குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களையும் கதைக்குள் கட்டிப்போட்டன.

இந்த கதைகள், 2002 ஆம் ஆண்டு முதல் படங்களாக வெளியாகின. இதில், ஹாரி பாட்டராக டேனியல் ரேட்க்ளிஃப் நடித்திருந்தார். இவரைத்தவிர, பிற முக்கிய கதாப்பாத்திரங்களான ரொனால்டு வீஸ்லியாக ரூபர்ட் க்ரின்டும் ஹெர்மைனி க்ரேஞ்சராக எமா வாட்சனும் நடித்திருப்பர். புத்தகங்களை போலவே படமும் சூப்பர் ஹிட் ஆனது. இருப்பினும், புத்தகங்களில் இருந்த பல அம்சங்கள் படத்தில் இல்லை. இது, ஹாரி பாட்டரின் புத்தக பிரியர்கள் மத்தியில் பெரிய குறையாகவே காணப்பட்டன. அதை நிவர்த்தி செய்யும் வகையில், இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

தொடராக வெளியாகும் ஹாரி பாட்டர்

புத்தகங்கள் வெளியாகி சுமார் 25 வருடங்களுக்கு பிறகு ஹாரி பாட்டரின் கதை, தொடராக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி பாட்டரின் 8 படங்களையும் தயாரித்த டேவின் ஹேமேனே இந்த தொடரையும் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதிய ஜே.கே.ரவுலிங் உருவாகவுள்ள தொடருக்கு இணை தயாரிப்பாளராக செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது தயாராகவுள்ள ஹாரி பாட்டர் தொடர், ஒரு ஒரு புத்தகத்தின் கதையும் ஒரு ஒரு சீசனாக வெளியாகவுள்ளன. இதையடுத்து, தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மெருகேற்றப்பட்டு இக்கதை உருவாகியிருக்கும் எனவும் ரசிகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் கருத்து என்ன?

புத்தகங்களிலிருந்து படங்களாக மாற்றியபோது, சில சிறப்பான அம்சங்களை படம் எடுத்தவர்கள் கோட்டை விட்டதாக ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, 25 வருடங்கள் கழித்து அரைத்த மாவையே திரும்பி அரைப்பது தேவைதானா எனவும் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஜே.கே.ரவுலிங் மீது ஏற்கனவே திருநங்கைகள் குறித்து அவதூறாக பேசியதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், அவர் இந்த தொடரில் இணை தயாரிப்பாளராக இருப்பதையும் சிலர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *