சென்னை: குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சாகுந்தலம் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கு தவிர்த்து தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சாகுந்தலம் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். இதனால் பல்வேறு நகரங்களுக்கு சென்று விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் சமந்தா. மேலும், படம் தொடர்பாக தொடர்ந்து பேட்டிகளும் கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை நடந்த விளம்பர நிகழ்ச்சியில் சமந்தாவால் கலந்து கொள்ள முடியவில்லை.

இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த வாரம் முழுவதும் என் படத்தை விளம்பரம் செய்து உங்கள் அன்பில் நனைந்ததில் சந்தோஷமாக இருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஓயாது புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில் தற்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், என் வாய்ஸ் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ‘ஏற்கனவே உடம்புக்கு முடியாத நிலையில் தற்போது காய்ச்சல் வேறா, பத்திரம் சம்மு. ஆரோக்கியமாக இருந்தால் தான் வேலை செய்ய முடியும்’ என அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

The post கடும் காய்ச்சலால் சமந்தாவின் குரல் பாதிப்பு appeared first on Kollywood News | Kollywood Images – Cinema.dinakaran.com.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *