இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பூபேஷ் பாகல், “இரண்டு குழந்தைகளுக்கு இடையேயான சண்டை மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. அதோடு இந்தச் சம்பவம் ஒரு மனிதனின் உயிரைப் பறித்திருக்கிறது. இதனை நியாயப்படுத்த முடியாது. ஆனால் பா.ஜ.க இதில் அரசியல் ஆதாயத்தைப் பெற முயற்சிக்கிறது. பா.ஜ.க-வினர் லவ் ஜிஹாத் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவர்களின் மகள்கள் முஸ்லிம்களைத் திருமணம் செய்தால், அது மட்டும் லவ் ஜிஹாத் அல்ல. சத்தீஷ்கர் பா.ஜ.க-வின் மூத்த தலைவரின் மகளிடம் ஒருமுறை கேளுங்கள், இது லவ் ஜிஹாத் இல்லையா…
