“இனி, கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசப் போகிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பணம் தராமல் தேர்தலைச் சந்திப்பதுதான் சுத்தமான அரசியல்

சென்னை கிண்டியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை பேசியதன் முழுவிபரம்:-

பணம் தராமல் தேர்தலைச் சந்திப்பதுதான் சுத்தமான அரசியல்

”தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பு எதுவும் இல்லை. நேரம் வரும்போது விரிவாகப் பேசுவேன். கட்சி ரீதியாகப் பேசிய சில சம்பவங்கள் விவாதம் செய்யப்படுகிறது. பா.ஜ.க. கட்டுக்கோப்பான கட்சி. அதில், அகில இந்திய தலைவர்கள் இருக்கிறார்கள். என் எண்ண ஓட்டங்களும் சில இருக்கின்றன. கட்சித் தலைவராக இருந்தாலும் சுத்தமான அரசியலுக்கான நேரம் வந்துவிட்டது. பணம் தராமல் தேர்தலைச் சந்திப்பதுதான் சுத்தமான அரசியல். பணம் தந்து யார் தேர்தலைச் சந்தித்தாலும்கூட உன்னதமான அரசியல் செய்வதாகச் சொன்னால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.

image

சில கருத்துகளை கட்சியினரிடம் பகிர்ந்து உள்ளேன்

தமிழக அரசியலில் பணம் தராமல் தேர்தலைச் சந்திக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. இதுபோன்ற தேர்தலை சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் மாற்றம் என்பது யுக்திகள், தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கும்போது சுத்தமாக இருக்க வேண்டும். இந்த கட்சியால் இப்படித்தான் தேர்தலைச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தர வேண்டும். இதனால் சில கருத்துகளை கட்சியினரிடம் பகிர்ந்து உள்ளேன். அதில் உறுதியாக இருக்கிறேன். எந்த கட்சிக்கும் எதிராக இல்லை. எல்லா கட்சிகளும் அவர்களின் பயணத்தில் எது சரியாக தோன்றுகிறதோ, அதில் பயணம் செய்கின்றனர். அப்படி அரசியல் செய்யக்கூடாது என தவறு சொல்லவில்லை. அது உரிமையும் கிடையாது.

2 ஆண்டு அரசியலைப் பார்த்துவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறேன்

தமிழக அரசியலில் 2 ஆண்டுகளாக இருந்துவிட்டு தமிழக பா.ஜ.க. தலைவராக உற்று நோக்கிய பின் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணித்து உள்ளேன். அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தமிழக மக்கள் காத்து இருக்கிறார்கள். நேர்மையான ஓட்டுக்கு பணம் தராத அரசியலுக்கு காத்து இருக்கிறார்கள். நேர்மையான முறைகளை மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பதற்கு நேரம் வந்து விட்டது என்பது என் நிலைப்பாடு. கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேசக்கூடிய ஆள் நான் கிடையாது. கூட்டணி பற்றி பேசுகின்ற அதிகாரமும் எனக்கு இல்லை. அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாகப் பேசுவேன். இந்த நிலைப்பாட்டிலும் அரசியல் மாற்றத்தில்தான் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2 ஆண்டு அரசியலைப் பார்த்துவிட்டு முடிவுக்கு வந்து இருக்கிறேன்.

image

வருங்காலத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசப் போகிறேன்

அரவக்குறிச்சியில் நான் போட்டியிட்டபோது தேர்தல் யுக்தி தெரியாத நேரம். அரசியல் நேர்மையாக, நாணயமாக, பணம் இல்லாத அரசியலாக முன் எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் என்பது ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வராது. அதை கட்சியில் தலைவர்கள், தொண்டர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டேன். வருங்காலத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசப் போகிறேன். கூட்டணி பற்றிய நேரம் வரும்போது தலைவர்கள் சொல்வார்கள். எந்த கட்சிக்கும் தலைவருக்கும் எதிரி கிடையாது. என் வேலையை விட்டுவிட்டு வந்து மாற்றத்தைக் கொடுக்காமல் தவறுகளை செய்ய தயாராக இல்லை. அந்த அடிப்படையில் பேசி உள்ளேன். கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை.

நான் சம்பாதித்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது

9 ஆண்டுகள் நான் சம்பாதித்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. குருவிபோல் சிறுகச்சிறுக சேர்த்த பணம் செலவாகிவிட்டது. தேர்தல் முடிந்தபின் கடனாளியாக உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் 80 கோடியில் இருந்து 120 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்பது கணக்கு. இப்படி செலவு செய்துவிட்டு சுத்தமான அரசியல், மாற்று அரசியல் செய்யப் போவதாகப் பேச முடியாது. தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுபவர் ஓட்டுக்கு பணம் தர மாட்டார் என்ற நம்பிக்கையை தந்தால் அதற்கான வாக்கு வங்கியும் உள்ளது. அரசியலில் இந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து உள்ளேன்.

image

எந்த கட்சியையும் குறை சொல்ல அதிகாரம் இல்லை

இதை மாற்றி, தான் இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் தேவை இல்லை என்ற முடிவுக்கும் வந்து உள்ளேன். மக்களிடம் ஒரேயொரு ஓட்டாக வந்தாலும் சிறுதுளி பெருவெள்ளமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த கட்சியையும் குறை சொல்ல அதிகாரம் இல்லை. அந்தந்த கட்சிகள் அவர்கள் யுக்தியின்படி நடக்கிறார்கள். நான் அரசியலுக்கு ஏன் வந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். தேர்தல் வர ஓராண்டு உள்ளது. இப்படிப்பட்ட தேர்தல் நடக்க வேண்டும் என்பது ஆசை. ஓர் இயக்கத்தில் இருப்பதால் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தலைவர்களிடம் சொல்கிறேன். அண்ணாமலை பேசியது சரி என்று 50 சதவீதமும் தவறு என்று 50 சதவீதமும் பேசி விவாதப் பொருளாக மாறி உள்ளது.

அரசியல் மாற வேண்டும். அதற்கு அச்சாரமாக 2024 தேர்தல் இருக்க வேண்டும். இந்த கருத்துகள் குறித்து தலைமையிடம் காலம் வரும்போது பேசுவோம். மாநில தலைவராக இருப்பதால் தனிப்பட்ட கருத்து எனச் சொல்ல முடியாது. தலைவராக என்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்ற மனப் பக்குவத்திற்கு வந்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *