சென்னை:

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் ஓயவில்லை. இந்த பெருந்தொற்றானது பல்வேறு வடிவங்களில், பல்வேறு மாறுபாடுகளில் மாறி மாறி உருவாகி வருகின்றது. அதன்படி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து இருக்கிறது. தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாகத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இடையில் சில வாரங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்குவதால் மீண்டும் மீண்டும் பள்ளிகள் மூடப்படுகிறது. இதுபோன்ற நாட்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சாலையோர சிறுமி ஒருவருக்கு டிராபிக் போலீஸ் ஆசிரியராக மாறியுள்ளார்.
சென்னை பிராட்வே பகுதியில் தான் 7ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அங்கு இருக்கும் டிராபிக் போலீஸ் ஒருவர் கல்வி கற்க உதவி செய்து வருகிறார்.பிராட்வே பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் மாணவி தீபிகா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த ஓராண்டாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இவரால் கணக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
அவ்வாறு பாடத்தில் தமக்கு எழும் சந்தேகங்களை அப்பகுதியில் டிராபிக் போலீசாக பணிபுரியும் மகேந்திரா என்பவரிடம் கேட்டு தெளிவு பெற்று வருகிறார். அதுவும் கடந்த ஓர் ஆண்டாகவே சிறுமி தீபிகாவுக்கு கணக்கு பாடத்தில் ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் மகேந்திரா தான் தீர்த்து வைத்து வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்வி மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரே ஆயுதம் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த நிலையிலும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சிறுமிக்கு ஆசிரியராக மாறிய மகேந்திராவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
                                                                                                                                                            – மாணிக்கவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *