எரிபொருள் விலையை, கச்சா எண்ணெய் விலைக்கேற்ப  நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

நகரம் பெட்ரோல் டீசல்
Delhi 95.41 86.67
Mumbai 109.98 94.14
Chennai 101.40 91.43
Kolkata 104.67 89.79
Source: Indian Oil

சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 64ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவருவதால், பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்காது என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *