சென்னை:

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான சட்ட முன் வடிவு மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார்.

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரானது ஆளுநர் உரையுடன் 5ஆம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் சில சட்ட முன்வடிவுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இறுதி நாளான இன்று பல்வேறு விதமான சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்படுவதோடு அவை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக தமிழக சட்டப்பேரவையானது காலை 10 மணிக்கு தொடங்கிய உடனே சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்வி நேரம் உள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு சட்ட முன்வடிவுகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. கூட்டுறவுத்துறை அமைச்சர் 2022ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் திருத்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய உள்ளார். இந்த சட்ட முடிவானது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. கூட்டுறவு சங்கங்களை பொறுத்த வரை நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு புகார்கள் எழுந்தது. பல நகை கடன்கள் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களே முறைகேடாக நகைகளை வைத்தும், போலி நகைகளை வைத்தும் பல்வேறு விதமான புகார்கள் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சரி செய்யப்படுவதற்கான வழிவகை செய்யும் வகையில் தான் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டு புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற அடிப்படையில் தற்போது புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *