சேலம்;
தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ளி உற்பத்தியாளர்கள் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் சேலத்தில் வெள்ளி கொலுசு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை….
சேலத்தில் வெள்ளி கொலுசு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது இந்த அலுவலகத்தினை சேலம் உதவி காவல் ஆணையாளர் நாகராஜ் மற்றும் வெங்கடேஷ் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் அதனை தொடர்ந்து வெள்ளி கொலுசு வியாபாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு காவல்துறை வழங்கும் என்று பேசினர் மேலும் சேலம் வடக்கு காவல் உதவி ஆணையாளருக்கு வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கூறுகையில் மத்திய அரசு வெள்ளிக்கொலுசு மற்றும் வெள்ளி பொருட்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் தற்பொழுது மூல வெள்ளி பொருட்களுக்கும் கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்களுக்கு இரட்டை ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் உள்ளது, இதனால் வெள்ளி தொழில் செய்ய முடியாமல் அதிக நபர்கள் கட்டிட வேலைக்கும் பல்வேறு கூலி வேலைகளுக்கும் சென்றுவிட்டனர் எனவே மத்திய அரசு இரட்டை ஜிஎஸ்டி முறையை கைவிட்டு வெள்ளி பொருட்களுக்கு ஒற்றை ஜிஎஸ்டி முறை அமல்படுத்தினால் வெள்ளி தொழில் காப்பாற்றப்படும். இந்த தொழிலை நம்பி சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். மேலும் வெள்ளி கொண்டுசெல்லும் தொழிலாளர்களை சந்தேகத்துடன் பார்க்கும் முறையை கைவிட வேண்டும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ளி தொழிலாளர்கள் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
+ There are no comments
Add yours