சென்னை:
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேவலம், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பன்னோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற தொடக்க விழாவில், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பேரில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார்.
ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி உள்ள 118 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் விரைவில் அதன் முடிவுகள் வரக்கூடும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று 100க்கு கீழ் உள்ளது. சென்னையில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் அதிகமாக உள்ளது. எனவே நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். சென்னையில் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours