சென்னை:

பழமையான 1,600 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்துக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பழமையான கட்டிடங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

முதற்கட்டமாக 1,600 பழமையான பள்ளிக் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஜனவரி 3வது வாரத்தில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 2 நாட்களில் வெளியாகும் என்றும் இடமாறுதலுக்கு பின் நியமனங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *