காஞ்சிபுரம்;

விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு 19.
12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லுாரைச்
சேர்ந்தவர் கந்தன் (வயது 56) தனியார் நிறுவன
ஊழியர். இவர் 2016 மார்ச்சில் பைக்கில் பின்னால்
அமர்ந்து திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு
நோக்கி பயணித்துள்ளார்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி கந்தன்
பயணித்த பைக் மீது மோதியது. இதில் பலத்த
காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி
இறந்தார். கணவர் இறப்புக்கு, 50 லட்சம் ரூபாய்
இழப்பீடு வழங்கக் கோரி கந்தனின் மனைவி
உஷா, சென்னை மோட்டார் வாகன விபத்து
இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதி பி. தங்கமணி கணேஷ்
பிறப்பித்த உத்தரவு: விசாரணையில், மனுதாரர்
கணவர் இறப்புக்கு, லாரியை அதிவேகமாகவும்,
அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம்
என்பது தெளிவாகிறது. எனவே மனுதாரருக்கு இழப்பீடாக, 19. 12 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு
7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா

இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *