விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை மாடர்ன் நகரை சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன், 48. இவர் உணவு கடத்தல் பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக உள்ளார். இவரது மனைவி சிவகாசி டவுன் போலீசில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன், பிளஸ் 2 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் அந்த வழியாக வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *