கோவை;
கோவை ஆத்துப்பாலம் முதல் குனியமுத்தூர் வரையிலும், தினமும் பல்லாயிரக்கணக்கான
வாகனங்கள் சென்று வருகின்றன, கேரள மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த சாலை மட்டுமே பிரதான சாலையாக உள்ள காரணமாக, இங்கு தினம்தொறும் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது, இதற்க்கு முக்கிய காரணமாக இந்த சாலையின் ஓரங்களில், உள்ள கடைகாரர்கள் ஆக்கிரமிப்பு செய்து மேற்கூறைகள் அமைத்துள்ளார், இதனை அகற்ற வேண்டும் என்று, பல்வேறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்த நிலையில், மாநகராட்சி மேற்கு மண்டல ஆணையாளர் உடனடியா இந்த ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்த உத்தரவிட்டு இருந்தார், ஆயினும் இதனை யாரும் ஏற்று கொள்ளாமல், ஆக்கிரமித்து கட்டியிருந்த மேற்கூறைகளை அகற்றாமல் இருந்து வந்தனர் இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சி
ஆணையாளர் உத்தரவின் பேரில், தெற்கு மண்டல ஆனையாளர் உத்தரவின் பேரில்
அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனர், மேலும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, காவல்துறையினர் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள்,
பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆத்துப்பாலம் முதல் குனியமுத்தூர் வரை சாலை ஓரங்களில்,
ஆக்கிரமிப்பு செய்திருந்த அனைத்து பொருட்களையும் இடித்து வாகனத்தில் ஏற்றினர், கடைகாரர்கள், ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அதிகாரிகளிடத்தில் தெரிவித்தனர் ஆனாலும்
ஏற்கனவே உங்களுக்கு அளிக்க பட்ட காலம் முடிவடைந்து விட்டது என்று கூறி அத்தனை
ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours