கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் 7 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இது முதலாவது ஓமிக்ரான் பாதிப்பு ஆகும். இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொத்தம் 64 பேருக்கு ஓமிக்ரான்ன் பாதிப்பு இருந்து வந்தது. தற்போது மேற்கு வங்கம் மாநிலத்தில் 7வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு குடும்பத்தினருடன் சென்று வந்த அந்த சிறுவனுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இது முதலாவது ஓமிக்ரான் பாதிப்பாகும். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *