சென்னை:

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கிவிட்டது. அதேபோல் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கிவிட்டது. கடந்த வாரத்திற்கு முன்பு வரை மழை விடாமல் பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2-3 நாட்களாக மழை குறைந்த நிலையில் வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நாளை மறுநாளே தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

தாழ்வுப்பகுதி

டிச.17-ல் தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வடகிழக்கு பருவக்காற்று வேகமாக வீசும். காற்றின் வேகம் 50 கிமீ வரை செல்ல கூடிய வாய்ப்பு உள்ளது.

காற்று வேகம்

கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். அதேபோல் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை முதல் மழை

தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 19ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் வடமாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *