சரி, பிரியங்கா நல்கரி விஷயத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது? என தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம்.

”தமிழ்ல ‘ரோஜா’ சீரியல்தான் பிரியங்காவுக்கு நல்ல ரீச் தந்தது. ரொம்ப வருஷம் ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியல் முடிஞ்சதுமே, அந்தப் புகழுக்காகவே ஜீ தமிழ் சேனல் அவரை ‘சீதாராமன்’ தொடர்ல நடிக்க கமிட் செய்தது. அந்தத் தொடருக்கு அவர் கேட்ட சம்பளமும் அதிகம். அதைக் கொடுத்து நடிக்கக் கூப்பிட்டு வந்தாங்க. ஆனா அந்த சீரியல் நல்லா போயிட்டிருந்தப்பவே, கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அது கூட பிரச்னை இல்லை.

ஆனா அந்தக் கல்யாணமே சீரியல்ல அவர் தொடர்ந்து நடிக்கறதுல சிக்கலை உண்டாக்கிடுச்சு. கணவர் நடிக்கறதை விரும்பலைனு சொல்லி தொடர்ல இருந்து வெளியேறணும்னு சொன்னாங்க. சீரியல் பிக் அப் ஆகத் தொடங்கின நேரம்கிறதால, சேனல் தரப்புல தொடரச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தினாங்க. ஆனா கேக்காம திடீர்னு ஒருநாள் வெளியேறிட்டாங்க. அதன்பிறகுதான் அந்த தொடருக்கு இன்னொரு பிரியங்காவை கமிட் செய்தது சேனல்.

ஆனா, நடிப்பைத் தொடர முடியாதுனு போனவங்க, குடும்பத்துல என்ன நடந்ச்சோ, அடுத்த மாசமே மறுபடியும் நடிக்கிறேனு வந்தாங்க. ஆனா அந்த இடத்துக்கு இன்னொரு கதாநாயகி வந்த பிறகு அதே சீரியலுக்கு எப்படித் திரும்ப வர முடியும்? அதனாலேயே அடுத்த ஆரம்பித்த ‘நளதமயந்தி’ தொடர்ல ஹீரோயினா கமிட் ஆகி நடிச்சிட்டிருந்தாங்க. இப்ப இந்தத் தொடர்ல இருந்து வெளியேறியிருக்காங்க” என்றார்கள் அவர்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *