இதன் வெளியீட்டையொட்டி பிங்க்வில்லா சேனலின் நேர்காணலில் பேசியுள்ள நடிகை ஜோதிகா, சூர்யா குறித்தும் ‘கங்குவா’ திரைப்படம் குறித்தும் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ‘ஶ்ரீகாந்த்’ படத்தின் ஸ்கிரிப்டை 24 மணிநேரம் முழுமையாகப் படித்துப் பார்த்து நடிப்பதற்கு ஓகே சொன்னதாகக் கூறியுள்ளதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'கங்குவா' சூர்யா

‘கங்குவா’ சூர்யா

சூர்யா பற்றிப் பேசியிருக்கும் அவர், “சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்திற்காக முழுமையாகத் தன்னை அர்பணித்து நடித்து வருகிறார். 200% உழைப்பைப் போட்டு அதற்காகத் தீவிரமாக உழைத்து வருகிறார். தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்பணிக்கும் அவரின் இந்தக் குணம்தான் நான் அவரைத் திருமணம் செய்துகொண்டதற்கான முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காக, தனது வேலைக்காகத் தன்னை முழுமையாக அர்பணிப்பவர் சூர்யா” என்று நெகிழ்ச்சியாக சூர்யா பற்றி மனம் திறந்து பேசினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *