“நானுமே கேள்விப்பட்டேன், ‘சமையலைக் கற்றுத் தரும் போதே அதையெல்லாம் படிச்சுட்டுதான் வர்றோம்’னு சில செஃப்கள் சொல்றாங்களாம். அதாவது உணவுப் பண்டத்தை சாப்பிட்டுப் பார்க்காம, தொட்டுப் பார்த்தே, முகர்ந்து பார்த்தே ‘ஓ.கே… உணவு சூப்பரா ரெடி ஆகிடுச்சு’னு சொல்றாங்களாம். ஒரு காயோ கறியோ வெந்துடுச்சான்னு கையால் தொட்டுப் பார்த்துச் சொல்லிடலாம். சில பொருள்களுக்கு குறிப்பா தனியா, மிளகு போன்றவற்றிற்கெல்லாம் மணம் உண்டுங்கிறதால, உணவுப் பண்டமும் சமையலும் மணமா இருக்குங்கிறதை நுகர்ந்து பார்த்துச் சொல்லிடலாம்.

ஆனா, சமையலுக்கு அடிப்படையான விஷயம் உப்பு. உப்பில்லாப் பண்டம் குப்பையிலனு சொல்வாங்க. அந்த உப்புக்கு மணம் கிடையாது. அதைச் சுவைத்துப் பார்த்துதான் சொல்ல முடியும்.

அதேபோல ருசிங்கிறது நாக்கை அடிப்படையாகக் கொண்டது. ‘நாவின் சுவை அறிந்ததுதான் சமையல்’னு இந்தத் துறையின் முன்னோடிகள் சொல்லியிருக்காங்க. அந்த நாக்குக்குத் தெரியாம சைவமோ, அசைவமோ எந்தவொரு உணவின் சுவையையும் தீர்மானிக்கவே முடியாது.

வெங்கடேஷ் பட் - தாமு

வெங்கடேஷ் பட் – தாமு

நானுமே வெஜிடேரியன். ஆனா சமையல் கலையைப் படிக்கத் தொடங்கினப்பவே அசைவம் சாப்பிடத் தொடங்கிட்டதால இப்ப சைவம், அசைவம் ரெண்டையும் பண்ணிட்டிருக்கேன்.

டிவி நிகழ்ச்சிகள்ல மிகைப்படுத்திச் சொல்லணும்னு அப்படிச் சொல்றாங்களோ என்னவோ? ஆனா அதெல்லாம் இல்லைங்க. எனக்கு அனுபவம் இருக்கு. நான் ருசிச்சுப் பார்க்காமலே சுவையைச் சொல்லிடுவேன்னா, அது ஒரு மித்னு சொல்லலாம். அதாவது கட்டுக்கதைதானே தவிர வேற ஒண்ணுமில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள்ல கோமாளி, டூப்னு வச்சிருக்காங்களே, யதார்த்தத்துல இப்படித் தர்ற தீர்ப்புகள்தான் கோமாளித்தனமானதுனு சொல்வேன்” என அடித்துச் சொல்கிறார் வினோத்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *