மகிழ்ச்சியின் பின்னால் உள்ள இரகசியம் என்ன தெரியுமா ?

 

சமீபத்திய ஆண்டுகளில் உளவியல் துறையால் மகிழ்ச்சியின் அறிவியல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு நபரின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் விஷயங்கள் என்ன என்பதை சொல்ல முடியும். இந்தப் பதிவில் மகிழ்ச்சியின் இரகசியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

நாம் அதிகமான மன அழுத்தம் மற்றும் கவலையில் உள்ளபோது நம் உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் அதிகமா சுரக்கின்றன.இது காலம் செல்ல செல்ல நம் வாழ்க்கையில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறைவான சிரிப்பு மற்றும் தூக்கம்,மன அழுத்தம்,தனிமை,நியாபக சக்தி குறைபாடு,ஆர்வமின்மை,மோசமான மனநிலை இறுதியாக தற்கொலை எண்ணம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

இதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள புன்னகை ஒன்றே சிறந்த ஒரே வழியாக உள்ளன.புன்னகை நம் உடலில் உள்ள எண்டோர்பின்கள் மற்றும் பிற உணர்வு-நல்ல இரசாயனங்களின் அளவை அதிகரிக்கலாம்.இது நமக்குள் ஏற்படும் வழியை குறைக்கவும் மேலும் மனநிலையை மாற்றவும் உதவும்.

எந்த இடத்தில் இருந்தாலும் புன்னகை நம்மை ஒரு நம்பகதன்மை உடையவராகவும் ஒரு பொலிவான சிறந்த மனிதனாக பிரதிபலிக்கும்.மேலும் எதிரில் இருப்பவர்களுக்கு நேர்மறையான செய்திகளை அனுப்புகின்றன.

சிரிக்கும்போது நமது மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்கின்றன.புதிய சிந்தனைகளை வளர்க்க உதவுகின்றன.ஆக்கபூர்வமான சிந்தனைகளை உண்டாக்குகின்றன.மேலும் படைப்பாற்றல் திறன் வளரும்.அதுமட்டுமில்லாமல் மனிதில் உள்ள பல குழப்பங்கள் மற்றும் சிக்கலை தீர்கின்றன.

‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’என்ற பழமொழிக்கு ஏற்ப நம் ஒற்றை புன்னகை பல நோய்களை விளக்கி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கின்றன என மருத்துவர்கள் சமீபத்திய ஆய்வில் கூறுகின்றனர்.எனவே முடிந்த வரை சிறிது வாழ பழகுவோம்.

வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டும். எவ்வித சிரமமான சூழலிலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். அப்போது தான் உங்கள் பகைவன் கூட உங்களை எதிர்க்க தயங்குவான்.

எப்பொழுதும் மனதில் மகிழ்ச்சியோடும் புன்சிரிப்போடும் இருங்கள். உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் வீட்டினரையும் சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். உங்கள் பாசிடிவ்வான நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *