ஆஸ்கர் நூலகத்தில் தமிழ்த் திரைப்படத்தின் திரைக்கதை!

அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் கடந்தாண்டு “பார்க்கிங்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. ஹரீஷ் கல்யாணும் எம்.எஸ்.பாஸ்கரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு எனப் பல விஷயங்களுக்காக இத்திரைப்படம் அதிகளவில் பாராட்டப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானாகத் தேடிப் போகும்!” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

இதுபோல பல இந்தியத் திரைப்படங்களின் திரைக்கதைகள் ஆஸ்கர் நூலகத்தை அலங்கரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Parking and Keerthy Suresh

Parking and Keerthy Suresh

ரோபோவாக கீர்த்தி சுரேஷ்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. அமிதாப் பச்சனும் கமல்ஹாசனும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற ஜூன் மாதம் 27-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ‘புஜ்ஜி’ என்ற சிறிய ரோபோவை அறிமுகப்படுத்தும் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. பிரபாஸுக்கு நெருங்கிய நண்பராக இந்த ரோபோ, திரைப்படத்தில் பயணிக்கிறது. இந்த ‘புஜ்ஜி’ என்ற ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருக்கிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *