“ராக்ஸ்டார்’, ‘தமாஷா’ போன்ற படங்களை இயக்கிய இம்தியாஸ் அலி இப்படத்தை இயக்கியிருக்கிறார். தில்ஜித் தோசன்ஜ் அமர் சிங் சம்கிலாகவும், சம்கிலாவின் இரண்டாவது மனைவியும் துணை பாடகியுமான அமர்ஜோத்தாக பரினீதி சோப்ராவும் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பாகப் பின்னணி இசையமைத்திருந்தார். பலரும் பின்னணி இசையைக் குறிப்பிட்டு பாராட்டியிருந்தனர். க்ளைமாக்ஸ் காட்சியில் சம்கிலா இறந்தபின் வரும் ‘Vida Karo’ என்ற பாடலும் பாலிவுட்டின் இதங்களை நெருடியுள்ளது. இந்நிலையில் இப்பாடல் உருவான விதம் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மானுடன் சேர்ந்து பாடல் கம்போஸ் செய்த அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குநர் இம்தியாஸ் அலி.

இம்தியாஸ் அலி - அமர் சிங் சம்கிலா

இம்தியாஸ் அலி – அமர் சிங் சம்கிலா

இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இம்தியாஸ் அலி, ” ‘Vida Karo’ பாடலை கம்போஸ் செய்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானது. இப்பாடலை நள்ளிரவு 2.30 மணிக்கு ரஹ்மான் ஸ்டூடியோவில் அவருடன் அமர்ந்து கம்போஸ் செய்தோம். ரஹ்மான் எல்லா லைட்டையும் ஆஃப் செய்துவிட்டு இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றச்சொல்லி, அந்தப் பாடலை கம்போஸ் செய்தார். அந்த இருட்டில் மெழுவர்த்தியில் வெளிச்சத்தில் பியோனோவில் கை வைத்து ட்யூனை வாசித்தார். கேட்டவும் பிரமாதமாக இருந்தது. பாடலாசிரியர் இர்ஸத் கமில் 45 நிமிடத்தில் பாடலின் வரிகளை எழுதி முடித்தார். பாடலைக் கேட்டதும் ஸ்டூடியோவில் இருந்த எல்லோர் மனதும் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் மிதந்தது. சம்கிலா இறந்தபின் வரும் அப்பாடல் அவ்வளவு உருக்குமாக இருந்தது. ரஹ்மான் பாடலாசியரிடம், ‘எல்லாரும் அழுறாங்க அப்படி என்ன எழுதுனீங்க’ என்று கிண்டலாகக் கேட்டார். இப்போது படம் பார்த்த எல்லோர் கண்களிலும் கண்ணீர் தழும்ப வைக்கிறது அப்பாடல்” என்று ஏ.ஆர். ரஹ்மானின் இசை குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *