தற்போது பெண்ணியம் பற்றிய புரிதல் தவறா இருக்குன்னு நினைக்கிறன்

 

அனுமோல் ஒரு தமிழ் மற்றும் மலையாள நடிகை ஆவார் .அவர் சாயில்யம், இவன் மேகரூபன், அகம், வெடிவழிபாடு மற்றும் ஜம்னா பியாரி போன்ற மலையாளத் திரைப்படங்களில் தோன்றினார்.2023ஆம் ஆண்டு இணையத்தில் வெளிவந்த அயலியில் குருவம்மாளாக நடித்து விமர்சகர்களால் பாராட்டை பெற்றவர் அனுமோல் நன்கு அறியப்பட்ட கதகளி மற்றும் பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார்.சமீபத்தில் அவர் கூறியதாவது,

நான் சரிவர நடன வகுப்பிற்கு போனதெல்லாம் இல்லை ,என்னை டான்சர் என்று சொல்லவே எனக்கு Guilt-அ இருக்கும்.மேலும் நான் என் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் பிளான் பண்ணிலாம் போகறரது இல்லை.அது போகும் போக்கிலேயே சென்று விடுகிறேன்.ஆரம்பத்தில் எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது மற்றும் என் குடும்பத்திலும் என்னை சினிமாவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை,சினிமாவே வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.இன்ஜினியரிங் முடித்தேன் நடனம் என்னுடனே பயணித்து கொண்டு வந்தது .

நான் கொச்சின் வந்தபோது அங்கு உள்ள ஒரு டிவி சேனலில் ஓரு ஷோவிற்காக என்னை கேட்டனர்.அப்போல்லாம் நான் நிறைய பேசுவேன் ,ஒரு டாபிக் கொடுத்தால் அதை அப்படியே பேசி கொண்டே இருப்பேன்.எனவே அதை பார்த்து தான் ஒரு இயக்குனர் என்னிடம் பேசினார்,எனக்கு சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லை என் குடும்பமும் வேண்டாம் என சொல்லி விட்டனர்,ஆனால் என் சேனலில் உள்ளவர்கள் சினிமாவும் ஒரு வித கேரியர் வாய்ப்புகள்,எனவே அதை பயன்படுத்தி கொள் என சொல்ல,நானும் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத நேரத்தில் படத்தில் நடித்தேன் .

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க ஆரம்பித்து நான் சினிமாவை நேசிக்க ஆரம்பித்தேன்.டைரக்டர் ,கேமரா மேன் என எல்லோரிடமும் ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன் ,மொத்தமாக இப்போது எனக்கு சினிமா என்றால் மிகவும் பிடிக்கும் .இது போல் அனுமோல் பேசிய ஸ்வாரஸ்யமான் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *