காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த சந்திராவின் ரீ-என்ட்ரி


திருவனந்தபுரத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த சந்திரா ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார்.சென்னையில் பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்தார்.கல்லூரி படிப்பை எம்.ஜி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆகியவற்றில் படித்தார் மேலும் ஹோட்டல் நிர்வாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இயக்குனர் சந்தோஷ் அவர்களின் மனசெல்லாம் படத்தினால் நடிக்க முடிவு செய்து இருந்தார்.2002ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் மூலம் இவர் மலையாள சினிமாவில் நுழைய ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தன.பிரித்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து அதிரடித் திரில்லர் ஸ்டாப் வயலன்ஸ் (2002) இல் முன்னணி பெண் பாத்திரத்தில் இறங்கினார்.

தொலைக்காட்சி தொடர்களில் தோன்றியதன் மூலம் அவர் பிரபலமடைந்தார்.தமிழில், அவர் தேவயானியுடன் இணைந்து நடித்த புகழ்பெற்ற கோலங்கள் தொடரில் கங்கா, மீண்டும் எதிர்மறையான சாயல்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்த பிறகு புகழ் பெற்றார் . சிறந்த எதிர்மறை பாத்திரத்திற்கான ஏசியாநெட் தொலைக்காட்சி விருதுகள் உட்பட பல பாராட்டுகளை அவர் வென்றுள்ளார் (2005,2006).

பிறகு பாயும் புலி ,தில்லாலங்கடி மற்றும் காக்கி போன்ற படங்களில் நடித்து இன்னுமும் புகழ் பெற்றார்.தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.இது இவரது ரசிகர்கள் பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளன.இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் பக்கத்தை தொடரவும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *