மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எந்த காரியத்தையும் சிரத்தையுடனும் வேகத்துடனும் செய்வீர்கள். தேவையற்ற மனசஞ்சலம் அகலும். எந்த ஒரு காரியம் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உங்களுடைய பணத்தேவை பூர்த்தியாகும். வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். வீண் இடையூறுகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

அஸ்வினி: இந்த வாரம் கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். நேர்மைத்தன்மை வெளிப்படும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்கநிலை மாறும்.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த உரசல்கள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சினையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப் படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

ரோகிணி: இந்த வாரம் காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்தகாலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்தொழில் சிறக்கும்.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், ராகு, செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 25-04-2024 அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 01-05-2024 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுடைய பேச்சாற்றல் மூலம் அனைத்து சிக்கல்களையும் சமாளிப்பீர்கள். பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். புதியதாக வீடு, மனை, வாகன சேர்க்கை ஏற்படும். செய்தொழிலில் மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும்.

மேலதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசம் நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும்.

திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

பரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'+k.title_ta+'

'+k.author+'

'; }); htmlTxt += '

';

$('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

Source link

Like this:

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *