மேஷம்: இந்த குரு மாற்றம் பதுங்கிக் கிடந்த உங்களை பிரபலபடுத்துவதாகவும், வசதி, வாய்ப்புகளை தருவதாகவும் அமையும். | பரிகாரம்: அறந்தாங்கியிலிருந்து 42 கிமீ தொலைவில் உள்ள திருப்புனவாசலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு படிக்க உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும். வாசிக்க > மேஷம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

ரிஷபம்: ஆக மொத்தம் இந்த குருமாற்றம் சற்றே மனநிம்மதியற்றப் போக்கையும், ஆரோக்கிய குறைவையும் தந்தாலும் மற்றொரு பக்கம் ஓரளவு வளர்ச்சியையும் தருவதாக அமையும். | பரிகாரம்: கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 17 கிமீ தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். வீட்டில் நல்லது நடக்கும். வாசிக்க > ரிஷபம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

மிதுனம்: இந்த குரு மாற்றம் அவ்வப்போது செலவுகளையும், பயணங்களையும் தந்தாலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரக் கூடியதாக இருக்கும். | பரிகாரம்: சென்னை – பாடி – திருவலிதாயத்தில் உள்ள சிவாலயத்தில் வீராசன கோலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். அதிர்ஷ்டம் பெருகும். வாசிக்க > மிதுனம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

கடகம்: இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஒடுங்கியிருந்த உங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுடன் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும். | பரிகாரம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும்வழியில் 40 கிமீ தொலைவில் உள்ள இலம்பையங்கோட்டூரில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடங்களை புதுப்பிக்க உதவுங்கள். வெற்றிகள் தொடரும். வாசிக்க > கடகம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

சிம்மம்: சகிப்புத் தன்மையுடனும், நாவடக்கத்துடனும் செயல்பட்டால் இந்த குரு மாற்றம் ஓரளவு நன்மையை தருவதாக அமையும். | பரிகாரம்: கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் எனும் ஊரில் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குகள். வாய்ப் பேச முடியாதவர்கள், காது கேளாதவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நடக்கும். வாசிக்க > சிம்மம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

கன்னி: ஆக மொத்தம் பலவிதப் பிரச்சினைகளாலும் வாடி, வதங்கிப் போயிருந்த உங்களின் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்குவதாக இந்த குரு மாற்றம் இருக்கும். | பரிகாரம்: வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் – பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள தக்கோலம் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வணங்குங்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிட்டும். வாசிக்க > கன்னி – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

துலாம்: இந்த குரு மாற்றம் வேலைச்சுமையையும், ஒருவித படபடப்பையும் தந்தாலும் மற்றொரு பக்கம் வெற்றியையும், உற்சாகத்தையும் அள்ளித் தருவதாக அமையும். | பரிகாரம்: தஞ்சாவூர் – திருகருகாவூர் செல்லும் வழியில் உள்ள தென்குடி திட்டை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுங்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும். வாசிக்க > துலாம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

விருச்சிகம்: இந்த குரு மாற்றம் பிரச்சினைகளாலும், சிக்கல் களாலும் முனகிக் கொண்டிருந்த உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், பணவரவையும் தருவதாக அமையும். | பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஏரையூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். வசதிகள் பெருகும். வாசிக்க > விருச்சிகம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

தனுசு: இந்த குருமாற்றம் உங்களை இமேஜை ஒருபடி குறைத்தாலும், உடல் நலக் குறைவையும் தந்தாலும் சகிப்புத் தன்மையாலும், சாதுர்யமான பேச்சாலும் ஓரளவு முன்னேற வைக்கும். | பரிகாரம்: தேனி மாவட்டம், குச்சனூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள்பாலிக்கும் ஸ்ரீராஜயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவுங்கள். வெற்றிகள் தேடி வரும். வாசிக்க > தனுசு – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

மகரம்: இந்த குரு மாற்றம் எதிர்பாராத திடீர் யோகங் களையும், செல்வ செழிப்பையும், அந்தஸ்தையும் உங்களுக்கு அள்ளித் தரும். | பரிகாரம்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள பட்டமங்கலம் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுங்கள். பழைய கோயிலை புதுப்பிக்க உதவுங்கள். நினைத்தது நடக்கும். வாசிக்க > மகரம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

கும்பம்: இந்த குரு மாற்றம் வேலைச்சுமையையும், பணப் பற்றாக்குறையையும் தந்தாலும் ஓரளவு உங்கள் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும். | பரிகாரம்: சென்னை – திருவொற்றியூரில் வீற்றிருக்கும் ஸ்ரீவடிவுடையம்மன் ஆலயத்துக்கு முன்பு உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். சாலையோரம் வசிப்பவர்களுக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும். வாசிக்க > கும்பம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

மீனம்: இந்த குரு மாற்றம் சின்னச் சின்ன அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும் உங்களை தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க உதவும். | பரிகாரம்: தஞ்சாவூர் – திருகருகாவூர் வழியில் உள்ள தென்குடித் திட்டையில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்குங்கள். அனாதை ஆசிரமங்களுக்கு உதவுங்கள். தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும். வாசிக்க > மீனம் – குருப் பெயர்ச்சி பலன்கள் முழுமையாக

(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)

'+divToPrint.innerHTML+''); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); }

var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); }

$('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;

if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{

} });

$(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);

var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1235347' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data);

var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");

if(i>=4){ return false; }

htmlTxt += '

'; }); htmlTxt += '

';

$('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *