மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: மேஷ ராசி அன்பர்களே… உங்களுக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை இருக்கும். இந்த வாரம் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் உங்கள் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.. தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்பச் செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் முன்னேற்றபாதையில் செல்லும். அரசியல்துறையினருக்கு அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கட்டளையிடுகின்ற பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டுவர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: ரிஷப ராசி அன்பர்களே… இந்த வாரம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். ராசியை பார்க்கும் சூரியனால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி சனியே அலங்கரிப்பதால் தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு புதிய முயற்சி கை கொடுக்கும். மகிழ்ச்சியான நிலை காணப்படும். அரசியல்துறையினருக்கு பிணக்கு நீங்கி ஒன்று சேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: மிதுன ராசி அன்பர்களே… இந்த வாரம் ராசிநாதன் புதன் நீசநிலையில் இருந்தாலும் அவரது சார பலத்தின் மூலம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கடினமான காரியங்கள் கூட சுலபமாக முடிந்துவிடும். ராசிக்கு ஐந்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதன் மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தேவையான பண உதவி கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான சுபச்செலவுகள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். அரசியல்துறையினருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை புதன்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: கடக ராசி அன்பர்களே… இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். ராசிக்கு 8-ல் கிரக கூட்டணி அமைந்திருக்கிறது. விருப்பதிற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும், வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடை நீங்கும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் நீங்கும். குடும்பம் பற்றிய கவலைகள் அகலும். குருவின் பார்வையால் உடல் ஆரோக்கியம் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பெண்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

கலைத்துறையினர் தங்கள் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற சில வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: சிம்ம ராசி அன்பர்களே… இந்த வாரம் ராசிநாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலைநிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மிகுந்த நன்மைகள் வந்து சேரும் காலகட்டம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மனவலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.

கலைத்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். வெற்றி வாய்ப்பு உண்டாகும். காரியத் தடை தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: கன்னி ராசி அன்பர்களே… இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு வரும். திடீர் சோர்வு அகலும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றிக் கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் லாப நஷ்டம் பார்த்து செயல்பட வேண்டும். விருப்பத்திற்கு ஏற்றற்போல் காரியங்கள் நடக்கலாம். அரசியல்துறையினருக்கு அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது – என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: துலா ராசி அன்பர்களே… இந்த வாரம் திரிகோணம் பலமாக இருப்பதால் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். புத்திகூர்மையுடன் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம்விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும் . பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: விருச்சிக ராசி அன்பர்களே… இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும்.

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே வந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. இல்லறச்சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும்.

கலைத்துறையினருக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்துறையினருக்கு மனஅமைதி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: தனுசு ராசி அன்பர்களே… இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு புதிய நட்பு கை கொடுக்கும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினர் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், திங்கள்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – சுக ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: மகர ராசி அன்பர்களே… இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட சீக்கிரமாகவே வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் போது கவனம் தேவை.

பாக்கிகள் வசூலாவது துரிதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். கூடுதலாக உழைத்து பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு இதமான சூழ்நிலை காணப்படும். மேலிடம் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவனை பிரார்த்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய், சுக்கிரன், சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: கும்ப ராசி அன்பர்களே… இந்த வாரம் சுபச்செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மனச்சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும்.

புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

வீண் மனக்கவலை, காரிய தாமதம் அகலும். கலைத்துறையினர் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்துறையினர் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் சூரியன், புதன், ராகு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: மீன ராசி அன்பர்களே… இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.

தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். அரசியல்துறையினருக்கு எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'+divToPrint.innerHTML+''); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); }

var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); }

$('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;

if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{

} });

$(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);

var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1225877' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data);

var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");

if(i>=4){ return false; }

htmlTxt += '

'; }); htmlTxt += '

';

$('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *