Loading

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம் செய்ய, விவசாய வேலை ஆரம்பிக்க, வாகனம் வாங்க, சாதுக்களின் ஆசி பெற,

வாஸ்துபடி வீட்டை சீரமைக்க, பயணம் தொடங்க, குழந்தைக்கு காது குத்த, அன்னம் ஊட்ட நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கூட்டுத் தொழில் வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். பயணங்கள் திருப்தி தரும்.

ரிஷபம்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் குழப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிக்கல்கள் வரக்கூடும்.

கடகம்: உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.

சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கன்னி: எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர்.

துலாம்: மன இறுக்கம் நீங்கும். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்

கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

தனுசு: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகுவது நல்லது.

மகரம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வியாபாரத்தில் வேலையாட்களால் தொல்லைகள் அதிகரிக்கும்.

கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்: எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *