சென்னை: சென்னை மாதவரம், மூலசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்ளின் டேனியல். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ‘சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கும் தனியார் நிறுவனம் ஒன்றை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் நடத்தி வந்தார்.

அவர் எனக்கு செர்பியா நாட்டில்லிப்ட் ஆபரேட்டர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால், உறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. என்னைப்போல், 27 பேரிடம் இதேபோல் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.44.37லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

எனவே, அவர் மீது நடவடிக்கைஎடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வினோத்குமார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த ரவியை நேற்று கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *