Loading

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: கடக ராசி அன்பர்களே… இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். ராசிக்கு 8-ல் கிரக கூட்டணி அமைந்திருக்கிறது. விருப்பதிற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும், வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடை நீங்கும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் நீங்கும். குடும்பம் பற்றிய கவலைகள் அகலும். குருவின் பார்வையால் உடல் ஆரோக்கியம் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பெண்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

கலைத்துறையினர் தங்கள் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேற சில வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

புனர்பூசம்: இந்த வாரம் மனஅமைதி உண்டாகும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். சந்திரன் சஞ்சாரம் விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும்.

பூசம்: இந்த வாரம் புதிய நபர்களின் நட்பும், அதனால் மனமகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பளு குறையும்.

ஆயில்யம்: இந்த வாரம் திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: சிம்ம ராசி அன்பர்களே… இந்த வாரம் ராசிநாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலைநிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மிகுந்த நன்மைகள் வந்து சேரும் காலகட்டம். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மனவலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.

கலைத்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். வெற்றி வாய்ப்பு உண்டாகும். காரியத் தடை தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

மகம்: இந்த வாரம் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். மனோதைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் திறமை வெளிப்படும். பொருளாதாரம் சம்பந்தாமாக தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

பூரம்: இந்த வாரம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. குழப்பங்கள் தீரும். காரிய வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

உத்திரம்: இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் மனஅமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: கன்னி ராசி அன்பர்களே… இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு வரும். திடீர் சோர்வு அகலும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றிக் கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் லாப நஷ்டம் பார்த்து செயல்பட வேண்டும். விருப்பத்திற்கு ஏற்றற்போல் காரியங்கள் நடக்கலாம். அரசியல்துறையினருக்கு அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

உத்திரம்: இந்த வாரம் பணவரத்து, காரிய தடை நீங்கும். மனதில் ஏதாவது கவலை தோன்றும், பய உணர்வு உண்டாகும். தூக்கம் குறையலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

அஸ்தம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும் சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்பி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மெதுவாக நடைபெறும்.

சித்திரை: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை ராகு காலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *