மதுரை: துபாயிலிருந்து மதுரை வந்த விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.80.77 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகப்படும்படி, இருந்த ஒருவரை நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் இருப்பது தெரிந்தது.

வயிற்றில் இருந்த 3 உருண்டைகளை இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். உருண்டைகளை சோதனை செய்தபோது, பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.80 லட்சத்து 77 ஆயிரத்து 160 மதிப்பிலான ஒரு கிலோ 355 கிராம் தங்கம் என, தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2009-ல் வெளியான அயன் என்ற திரைப்படத்தில் இதே பாணியில் தங்கம் கடத்தி வரும் காட்சி இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *