கேரேவுக்கான அந்த யார்க்கர், காயத்திற்காக ஸ்டார்க்கை பழி தீர்த்து வெளியேற்றிய அந்த ஷார்ட் பால், கம்மின்ஸின் அவுட்சைட் எட்ஜை குசலம் விசாரித்ததோடு முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த முடிவை அவரைப் மறுபரிசீலனை செய்ய வைத்த அந்த பேக் ஆஃப் லெந்த் டெலிவரி, இறுதியில் ஹாசில்வுட்டினை வெளியேற்றி `Mission Accomplished” என ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அந்த ஃபுல் லெந்த் டெலிவரி என அத்தனையும் ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் இருந்து வந்திருப்பதுதான் நம்ப முடியாதது.

எப்போதுமே காபா வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரிதான் என்றாலும், அதிகரித்த வெப்பம், காலிற்கு சங்கிலியிடும் காயம் என பலவும் ஷமரை பின்னோக்கி இழுத்தன. ஆனால் ஒவ்வொரு புள்ளியிலும் அவரது திறன் மட்டுமல்ல 11.5 ஓவர்களை காயத்தையும் வலியையும் பொருட்படுத்தாமல் வீசிய மனோபலம்தான் லாராவின் கண்களில் இருந்து கார்ல் ஹூப்பர் கண்கள் வரை பனிக்க வைத்தன, ரிசப் பண்டினையும் கூடவே நினைவூட்டின.

Shamar Joseph

Shamar Joseph
DARREN ENGLAND

ரோட்னி ஹாக் சொன்ன எதிர்மறையான வார்த்தைகள் அணிக்குள் உத்வேகத்தைக் கொண்டு வந்ததென்றால் இந்த ஓவர்சீஸ் டெஸ்ட் வெற்றி ஒரு உலகக்கோப்பையை வென்ற தாக்கத்தை வீரர்களுக்குக் கொடுத்துள்ளது. டெஸ்ட் ஃபார்மேட்டின் மகிமையே அதுதான்!

இது ஆஸ்திரேலியாவின் தோல்வி என்றோ மேற்கிந்தியத்தீவுகளின் வெற்றி‌ என்றோ முத்திரை குத்தப்பட்டுவதை விடவும், ஓர் இளம் வீரரின் விட்டுக் கொடுக்காத மனோதிடத்தையும், வைராக்கியத்தையுமே ஒருங்கே காட்சிப்படுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *