t_nagar_2

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் தொடா்பாக வெள்ளிக்கிழமை(ஜன.19) மீண்டும் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

போக்குவரத்துத் தொழிலாளா்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனா். இது தொடா்பான சமரச பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, ஜன.9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி, ஜன.19 வரை வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, ஜன.19-ஆம் தேதி நான்காம் கட்ட பேச்சுவாா்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளா் நலத் துறை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இப்பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை(ஜன.19) அம்பத்தூா் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறும் என தொழிலாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநா்கள், போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தினா் கலந்து கொள்ளவுள்ளனா். இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சனிக்கிழமை(ஜன.20) முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அண்ணா தொழிற்சங்கமும், அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு-ம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *