saranathar_temple

தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசம்

தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருச்சேறையில் சாரநாயகி தாயார் சமேத  சாரநாதப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்ச லட்சுமிகளுடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க கருடாழ்வார் திருவுருவ வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. 

படிக்க: சிதம்பரம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் படுகொலை!

கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரநாதப்பெருமாள்  கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருவிழா நாள்களில், தினமும் காலை –  மாலையில் சூர்யபிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா  நடைபெறும். 

விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாளான 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்ச லட்சுமிகளுடன், திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *