வழக்கின் நிலை குறித்து ஆராய்ந்த நீதிமன்றம், “ஒருவர் அல்லது இருவருமே மைனராக இருக்கலாம் அல்லது மைனராக உள்ள வயது விளிம்பில் இருக்கக் கூடிய இரண்டு இளம் பருவத்தினருக்கு இடையேயான உண்மையான காதலை கடுமையான சட்டம் அல்லது அரசு நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த முடியாது. 

நீதித்துறை அமைப்பு சட்டத்தை விளக்குவது மற்றும் நிலைநிறுத்துவது மட்டுமல்லமால், சமூகத்தின் இயக்கவியலையும் புரிந்துகொள்ள வேண்டும்.

எஃப்.ஐ.ஆர் ரத்து செய்யப்படாவிட்டால், அது தம்பதியரின் இரண்டு மகள்களின் எதிர்காலத்தை பாதிக்கும் மற்றும் உண்மையான நீதி தோற்றுப்போக வழிவகுக்கும்.

court order -Representational Image

court order -Representational Image

சட்டத்தை எப்போதும் கணித முறையில் மட்டுமே பார்க்க முடியாது. சில சமயங்களில், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் போன்ற பிற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் தராசின் ஒரு பக்கம் சட்டத்தைக் கொண்டிருக்கும் போது, மறுபக்கம் குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என முழு வாழ்க்கையையும் சுமந்து செல்லும்”‘ என்று நீதிமன்றம் கூறி அந்நபர் மீதான வழக்கை ரத்து செய்தது. 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *