BSNL_segt_to

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 4ஜி சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் டி.தமிழ்மணி கூறினாா்.

இது குறித்து அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வீடுகளுக்கு ஃபைபா் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது. தற்போது, 4.45 லட்சம் ஃபைபா் இணைப்புகள் உள்ளன. மாதம்தோறும் 16,000 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளா்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக 18004444 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘பாரத்நெட் உதையமி’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் இதுவரை 7,276-க்கு கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 4ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 440 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *