சென்னை: அத்தியாவசிய பொருட்களை கடத்தியதாக ஒரே மாதத்தில் 957 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டம், சிறப்புபொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களும் அத்தியாவசியப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர், அவர்களுக்கு உடந்தையாகசெயல்படுவோர் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த டிச.1 முதல்31-ம் தேதி வரையிலான ஒரு மாதத்தில், கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.21.17 லட்சம் மதிப்புள்ள 3,118 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி, 350 எரிவாயு சிலிண்டர்கள், 1,750 லிட்டர் மண்ணெண்ணெய், 565 கிலோ கோதுமை, 577 கிலோ துவரம் பருப்பு, 25 கிலோசர்க்கரை ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 179 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன.

இதுதொடர்பாக, 957 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில், 13 பேர் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல், பதுக்கல் தொடர்பாக 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *