அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு நடைபெற்ற சதியில், இந்திய அரசு ஊழியர் ஒருவருக்கு உதவியதாக, 52 வயதான நிகில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த வழக்கில், குப்தா மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி, செக் குடியரசு நாட்டில் வைத்து குப்தா கைதுசெய்யப்பட்டார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி, செக் குடியரசு அதிகாரிகள் குப்தாவை `கொலைசெய்ய சதி செய்தல்’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *