Magalir_urimai_thogai_womens_scheme_edi

 

பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 

வழக்கமாக மாதத்தின் இடையில் அதாவது 15ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கலுக்காக 5 நாள்கள் முன்பே வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.06 கோடி மகளிா் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறாா்கள். அத்துடன் உரிமைத் தொகை கோரி, 11.85 லட்சம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த மகளிருக்கு இந்த மாதம் முதலே உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது 1.15 கோடி மகளிருக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் முன்கூட்டியே பயன்பெரும் வகையில் 1.15 கோடி மகளிருக்கு ரூ.1150 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *