Train_Rail_edi

கோப்புப் படம்

 

ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 – 24ன் நடப்பு நிதியாண்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், டிசம்பர் மாதம் வரை பயணித்த பயணிகள் விகிதம் 12.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமென்றால், கடந்த டிசம்பர் வரை 52.8 கோடி மக்கள் ரயிலில் பயணித்துள்ளனர். 

2023 – 24 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.5,254 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.1 சதவிகிதம் அதிகமாகும்.

இதேபோன்று சரக்கு போக்குவரத்திலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது கடந்த டிசம்பவர் வரை 29.351 மில்லியன் டன் சரக்குகள் ரயில் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ. 2,651 வருவாய் கிடைத்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *