வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாலே: பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் கேலி செய்த விவகாரத்தில், அதிபரை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை எழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை, மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம், மால்ஷா ரஷீப், மரியம் ஷியுனா ஆகியோர் விமர்சித்ததுடன், கேலி செய்தனர். இதற்கு இந்தியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டித்தார். 3 அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாலத்தீவு பார்லிமென்டின் சிறுபான்மையின பிரிவு தலைவர் அலி அஜிம், வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாம் எம்.பி.,க்கள் என்ற முறையில் நாட்டின் வெளியுறவு கொள்கையின் உறுதித்தன்மையை நிலை நிறுத்துவதற்கும், அண்டை நாடு தனிமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

அதிபரை பதவி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்களா? பார்லிமென்ட் செயலகம், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சுற்றுலா தொழில் சங்கம் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களை பற்றி துணை அமைச்சர்கள் சமூக ஊடக தளங்களில் வெளியிட்ட கருத்துகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் தொழில் சங்கம் (MATI) வன்மையாக கண்டித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

-->


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *