வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே கூறியிருக்கிறார். 1984 மக்களவைத் தேர்தலின்போது… அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வேலூர் தொகுதியைக் கைப்பற்றிய ஏ.சி.சண்முகம், அதன்பிறகு கடந்த 2014, 2019 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுப் பின்னடைவைக் கண்டார். தொடர் தோல்வியை தனது கௌரவப் பிரச்னையாக கருதிய ஏ.சி.சண்முகம், இந்த முறை வேலூரை விட்டுவிடக் கூடாது என்ற திட்டத்துடன் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரின் காய் நகர்த்தல்கள் அவருக்கெதிராகவே மாறிப்போயிருக்கின்றன என்கிறார்கள் உள்விவரம் அறிந்த சிலர்.

சாதி பெயரைக் குறிப்பிட்டு போஸ்டர்

பெயருக்குப் பின்னால் சாதியைக் குறிப்பிட்டு ஒட்டப்படும் போஸ்டர்கள், மருத்துவ சிகிச்சை – வேலை வாய்ப்பு முகாம்களில் ஏற்படும் சலசலப்புகள் என சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் சிக்கிக்கொண்டிருக்கிறார் ஏ.சி.சண்முகம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, இவரின் மருத்துவமனை சார்பில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒடுகத்தூர் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அங்குச் சிகிச்சைக்கு சென்ற விவசாயி ஒருவரை மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு வரச்சொல்லியிருந்தார்களாம். அங்குச்சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விவசாயி உடல்நிலை மோசமாகி… சில நாள்களிலேயே இறந்து போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜனவரி 7-ம் தேதி… ஏ.சி.எஸ் மருத்துவக் குழுவினர் ஒடுகத்தூரில் மீண்டும் மருத்துவ முகாம் அமைத்தனர். இதையறிந்து, அங்குசென்ற விவசாயியின் குடும்பத்தினரும், உறவினர்களும் ரகளையில் ஈடுபட்டனர். பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முகாம் பொறுப்பாளரையும் சரிமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து சென்ற போலீஸார் தகராறில் ஈடுபட்ட நபர்களை விரட்டியடித்தனர். எனினும் ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி தரப்பில் இருந்து புகார் ஏதும் போலீஸில் கொடுக்கப்படவில்லை.

மருத்துவ முகாமில் ஏற்பட்ட மோதல்

இதனிடையே, கடந்த டிசம்பர் 23-ம் தேதியும், வேலூரில் வேலை வாய்ப்பு முகாமை நடத்தினர். 4,450 பேர் பதிவு செய்த நிலையில், 476 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். அதேபோல, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் ஒருபடி மேலேபோய்… ‘வருங்கால மத்திய இணையமைச்சரே’ என்று போஸ்டர் அடித்து ஒட்டியும் அலப்பறைக் கொடுத்துவருகிறார்கள். இதைவிட ‘மருது பாண்டியர்கள்’ ஜெயந்தி விழாவின்போது… ‘சாதி சமயச் சார்பற்ற மதநல்லிணக்க ஆட்சியைக் கொடுப்போம்’ என்று சொல்லிவிட்டு, ‘சமுதாயக் காவலர் ஏ.சி.சண்முகம் முதலியார்’ என்று சாதிப் பெயருடன் போஸ்டர் அடித்து ஒட்டியதுதான் ‘ஹைலைட்’.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *