செய்திப்பிரிவு

Last Updated : 22 Dec, 2023 06:20 AM

Published : 22 Dec 2023 06:20 AM
Last Updated : 22 Dec 2023 06:20 AM

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த 01.01.2023 முதல் 20.12.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்டதாக 459 பேர், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 116 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 84 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் உட்பட மொத்தம் 687 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிச.14 முதல் 20 வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும்3 பெண்கள் உட்பட 20பேர் மீதுகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவ்வகை குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *