மேஷம்: பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு உண்டு.

ரிஷபம்: வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும், எடுத்து வைக்க முடியாதபடி செலவும் இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பம் உண்டாகும்.

சிம்மம்: உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. முன்கோபத்துக்கு இடம் தராதீர்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமல் இருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்து ஏமாந்த தொகைகைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் ஆதாயம், திருப்பம் உண்டாகும்.

மகரம்: சலிப்பு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுக்காமல், நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நேரம் ஒதுக்கி உடற்பயிற்சிகள், யோகா, தியானம் செய்வது நல்லத

கும்பம்: உங்கள் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும், போராடி வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

மீனம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *