தமிழ் திரையுலகில், ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், கார்த்திக் சுப்புராஜ். இவர், பீட்ஸா படத்தை இயக்கி சினிமாவிற்கள் எண்ட்ரி கொடுத்தார். 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அதன் முன் கதை (Prequel) திரைப்படம் இம்மாதம் 10ஆம் தேதி வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வசூலையும் குவித்து வருகிறது. 

கார்த்திக் சுப்புராஜ்ஜின் சம்பளம்..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதை ஒட்டி, கார்த்திக் சுப்புராஜ் இதனை இயக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர், இந்த படத்திற்காக ரூ7 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸில் மீண்டும் வைல்ட்கார்ட்! உள்நுழையும் 3 பேர் இவர்கள்தான்!

ஜிகர்தண்டா2 படத்தின் கதை..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், 1970களில் நடக்கும் கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருக்கும் பிரபல ரவுடி, அவனை வைத்து படம் இயக்கும் ஒரு இயக்குநர் என்ற முந்தைய ஜிகர்தண்டா படத்தின் கான்செப்ட் தான் இதிலும் உபயோகப்படுத்த பட்டிருக்கிறது. இதில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படங்களுக்கெல்லாம் நன்றாக நடித்திருக்கிறார் என்ற பாராட்டு அவருக்குத்தான் போய் சேரும். ஆனால், இந்த முறை நல்ல நடிகர் என்ற பாராட்டை ராகவா லாரன்ஸ் பறித்து சென்று விட்டார். 

கார்த்திக் சுப்புராஜிற்கு பல வகைகளில் இருந்தும் பாராட்டுகள்..

தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே தனிபிரியம் உண்டு. அவரது முதல் படமான பீட்ஸா, ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நின்றதற்கு அவரது கதை நேர்த்தியும் ஒரு காரணம். அதன் பிறகு 2 வருட இடைவேளைக்கு பிறகு அவர் இயக்கிய ஜிகர்தண்டா படமும் மாபெரும் ஹிட் அடித்தது. இறைவி படம் ஆங்காங்கே சர்ச்சையை கிளப்பினாலும், பெரும்பாலான ரசிகர்களிடையே வரவேற்பினையே பெற்றது. இதையடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் வைத்தார். ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களை ஏமாற்ற, பல வருடங்களுக்கு பிறகு திரையிடப்பட்ட கார்த்திக் சுப்புராஜ்ஜின் படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தை படம் பார்க்கும் ஒரு தரப்பினர் மட்டுமன்றி, அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | புதுமுக இயக்குநருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *