தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம்!
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.