ஏற்கெனவே அம்மணி அம்மன் கோயிலில் பல முறை திருக்கார்த்திகை விழாவை பிரமாண்டமாக நடத்தி ருத்ராட்ச லிங்கம், 1008 மூலிகை லிங்கம், ஆயுஷ் ஹோமம் போன்றவை நடத்தி உள்ளோம். இந்த ஆண்டும் வாசகர்களின் குடும்பம், சுற்றம், உறவுகள், நண்பர்கள் நலம் பெறவென அபூர்வமான “உமாமஹேஸ்வர ஹோமம்’, தீப வழிபாடுகள் போன்றவற்றை நடத்த உள்ளோம். அம்மணி அம்மன் கோயில் நிர்வாகமும் அன்னதானம், திருமுறை பாராயணம் போன்றவற்றை நடத்த உள்ளது.
உமையோடு கூடி மகிழும் சிவபெருமானின் திருவடிவம் உமாசகிதர் என்றும், உமா மகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வடிவில் அம்பிகை ‘பார்யா சௌக்ய பிரதாயினி’ என்று அழைக்கப்படுகிறாள். தமிழகத்தில் பல கோயில்களில் உமாதேவியும், சிவபெருமானும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்கும் கோலமாக அருட்காட்சி வழங்குகின்றனர்.

பிள்ளைகளுக்கு வேலை, நல்ல வரன் அமைந்து கல்யாணம் கைகூடிட, மருத்துவச் செலவுகள் எதுவுமின்றி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ உமாமகேஸ்வர ஹோம வழிபாடு அருள்செய்யும். அதேபோல் புண்ணிய தலங்களில் – ஆலயங்களில் நிகழும் உமாமகேஸ்வர ஹோமங்களிலும் சங்கல்பப் பிரார்த்தனை செய்து வழிபடலாம்.